ஆப்கனில் சோபாவுக்கு அடியில் குண்டு வைத்து வேட்பாளர் கொலை

கந்தகார்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வேட்பாளர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் நாளை மறுதினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை சீர்குலைக்க தலிபான், ஐஎஸ் உட்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசார கூட்டங்களில் இந்த அமைப்புகள் இதுவரை நடத்தியுள்ள வெடிகுண்டு தாக்குதல்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 9 வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ெஹல்மண்ட் மாகாணத்தில் உள்ள தேர்தல் அலுலவகத்தில் ஜாபர் குவ்ராமன் என்ற வேட்பாளர் நேற்று தனது தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த சோபாவுக்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில், ஜாபர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார். அங்கிருந்த தொண்டர்களில் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: