×

ஜிபிஎப் வட்டி 8 சதவீதமாக உயர்வு

புதுடெல்லி:  பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பொது சேமநல நிதி (ஜிபிஎப்) சேமிப்புக்கு வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியான பிஎப் பிடித்தம் போல, அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட யாரும் தாமாக முன்வந்து ஓய்வுக் கால நிதி பாதுகாப்புக்காக சேமிக்க ஜிபிஎப் திட்டம் அமலில் உள்ளது. அதில் சேமிக்கும் பணத்துக்கு வட்டி வழங்கப்படுகிறது.

கடந்த மாதம், சிறுசேமிப்பு, என்எஸ்சி, பிபிஎப், போன்றவற்றின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது இதை தொடர்ந்து பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜிபிஎம்)வட்டியையும் 0.4 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அறி வித்துள்ளது.  இதன்மூலம், இதுவரை பொது வருங்கால வைப்பு நிதிக்கு ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கு 7.6 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஎப் திட்டத்தில் அரசு ஊழியர்களின் அவசர தேவைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. வட்டியில்லா கடன் திட்டமாக இது உள்ளது. ரயில்வே, பாதுகாப்புத்துறை உட்பட மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GBP, interest, promotion
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு