15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன  பொதுசெயலாளர் திருச்செல்வன் கூறியதாவது: டாஸ்மாக் ஊழியர் களுக்கான பொது பணியிட மாறுதல் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகியவற்றின் மீது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை ஆணையை நீக்குவதற்கு நிர்வாகம் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தற்போது பெட்ரோல் விலை மற்றும் பேருந்து கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வை கருத்தில்கொண்டு எப்.டி.சி தொகையை மாதம் ரூ.1,000 ஆக வழங்க வேண்டும். மேலும், கடை ஊழியர்களுக்கு மருத்துவ செலவுகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: