நேர்முக தேர்வின்போது சான்றிதழ் சரிபார்ப்பு: விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது கெசட்டட் ஆபீசர் கையெழுத்து தேவை இல்லை: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாணவ, மாணவிகள் உயர் படிப்புக்கு மற்றும் மத்திய, மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழில் கெசட்டட் ஆபீசர் (அரசு உயர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம்) கையெழுத்து வாங்க வேண்டும் என்ற நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. இப்படி கையெழுத்து வாங்கும்போது சில அதிகாரிகள் அதற்கு பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இதுபோன்று வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவ - மாணவிகள் இனி கெசட்டட் ஆபீசரின் கையெழுத்து வாங்க தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளர் பி.டபிள்யு.சி.டேவிதார் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகள் சான்றிதழ் நகலை உறுதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நேரத்தை மிச்சப்படும் வகையில் இந்த நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படுகிறது.

அதன்படி, பொதுமக்களுக்கு தேவையற்ற சங்கடங்களை குறைப்பது, விண்ணப்பங்களை அனுப்புவதற்காக கடைசி நேரத்தில் ஏற்படுத்தும் பிரச்னை ஏற்படுத்தாமல் இருப்பது, அலுவலகங்களில் தேவையில்லாத ஆவணங்களை குறைப்பது, சான்று உறுதி வழங்குவதற்கான நடைமுறையை எளிதாக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேரத்தில் ஒரிஜினல் சான்றிதழ் காட்ட தேவை உள்ளது. அப்போது அரசு அதிகாரிகள் சான்றிதழ்களை உறுதி செய்வதால் கெசட்டட் ஆபீசர் கையெழுத்து அவசியம் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: