×

விற்பனையில் தில்லுமுல்லு 127 பெட்ரோல், டீசல் நிறுவனங்களுக்கு தடை: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் 127 பெட்ரோல், டீசல் நிறுவனங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்திலுள்ள அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகளில் கடந்த 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் (செயலாக்கம்) தலைமையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, தமிழகத்தில் உள்ள 818 பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சென்னை மண்டலத்தில் 34 நிறுவனங்கள் மீதும், கோவை மண்டலத்தில் 24 நிறுவனங்கள் மீதும், திருச்சி மண்டலத்தில் 30 நிறுவனங்கள் மீதும், மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் மீதும் ஆக மொத்தம் 127 பெட்ரோல், டீசல் வழங்கும் நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. அவ்வாறு சட்டவிதிகளுக்கு முரணாக அளவு குறைவாக விற்பனை செய்த பெட்ரோல் - டீசல் பம்புகளில் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : diesel firms ,Tamil Nadu , Petrol, Diesel, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...