100% இயற்கை விவசாயம் , ஐ.நா. விருது

நியூயார்க்: 100 சதவிகிதம் இயற்கை விவசாய மாநிலமான சிக்கிமுக்கு, மிகச்சிறந்த கொள்கைகளை அமல்படுத்தியதற்கான விருதினை ஐ.நா கவுன்சில் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :  சர்வதேச அளவில் 25 நாடுகளின் 51 கொள்கைகளின் அடிப்படையில் நிலைக்கத்தக்க வளர்ச்சி, நீண்டகால திட்டமிடலுக்காக சிக்கிம் மாநிலத்துக்கு ‘பியூச்சர் பாலிசி விருது 2018’ அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக பியூச்சர் கவுன்சில் மற்றும் ஐஎப்ஓஏஎம் சர்வதேச ஆர்கானிக்ஸ் அமைப்புகள் இணைந்து இந்த விருதை அறிவித்துள்ளன. உலகிலேயே முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் தேர்வாகியுள்ளது. பிரேசில், டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் தங்களது இயற்கை விவசாயக் கொள்கைகளுக்காக சில்வர் விருதுகளை பெற்றுள்ளன.  சிக்கிமில் முழுமையாக ரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 66 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: