ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

சென்னை: தொடர் விடுமுறையை பயன்படுத்தி கட்டணக்கொள்ளையில் ஈடுபடும், ‘ஆம்னி’ பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி சரஸ்வதி பூஜை, 19ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அதனைதொடர்ந்து வரும், 20, 21ம் தேதிகளில் சனி, ஞாயிறு என்பதால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையாகவுள்ளது. இதனால் படிப்பு, வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  அவர்களில் ரயில் பயணம் செய்வோர் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டனர். பஸ்களில் செல்வோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை, தங்களுக்கு சாதகமாக ‘ஆம்னி’ பஸ் உரிமையாளர்கள் பயன்படுத்தி கட்டணத்தை உயர்த்துகின்றனர்.  சென்னை மட்டும் அல்லாது கோவை, மதுரை, திருச்சி, சேலம் என மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் இதே நிலையே உள்ளது.

இதுகுறித்து ேபாக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது: ‘ஆம்னி’ பஸ்களின் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து, அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வருகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.  மக்களிடம் ‘ஆம்னி’ பஸ் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதே பஸ்சின் ஓரங்களில் எழுதப்பட்டிருக்கும், மொபைல் எண்ணில், தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

கட்டணம் எவ்வளவு? சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ்களில் சனி, ஞாயிறு தினங்களில் கட்டணமாக, 600-1500 வரையிலும், சென்னை-கோவைக்கு இயக்கப்படும் வண்டிகளில், 700-1,700 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் சம்மந்தப்பட்ட கட்டணங்களிலிருந்து, 500 முதல் 1,000 வரையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: