×

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 14 நடுநிலைப் பள்ளிகளில் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தன.இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் விரைவில் அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சின்னனந்தமடம் நடுநிலைபள்ளி மற்றும் கல்யாணபுரம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இரண்டு பள்ளிகளில் ₹4 லட்சம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் அமையவுள்ளது. இதைத் தவிர்த்து பல்வேறு பள்ளிகள் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதற்காக ₹3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இரண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் இரண்டு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,zone ,Tondiarpet , Tondiarpet zone,Smart Class in 2 schools
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...