×

அருணாச்சல் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த வாரம் 1 கி.மீ தூரம் வரை ஊடுருவியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவது அடிக்கடி நடக்கிறது. கடந்தாண்டு எல்லை அருகேயுள்ள டோக்லாம் பகுதிக்குள் ஊடுருவி சீன வீரர்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர். இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு பின் அவர்கள் வெளியேறினர். தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கடந்த வாரம் சுமார் 1 கி.மீ தூரம் வரை ஊடுருவியுள்ளனர்.

இதை வேட்டைக்கு சென்ற உள்ளூர் மக்கள் பார்த்து அவர்களை படம் பிடித்து, இந்திய ராணுவத்துக்கும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். அருணாச்சலப் பிரதேசத்தை, இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்காமல், அதை தெற்கு திபெத் என்ற சீனா இன்னும் கூறிவருகிறது. இதையடுத்து ராணுவ வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். இந்திய வீரர்களின் எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் பின்வாங்கியதாக தெரிகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinese ,border ,Arunachal , Arunachal border, Chinese Army, Navigation
× RELATED பிரித்தாளும் சூழ்ச்சிதான் பாஜவின்...