வங்கியில் கொடுத்த ஆவணம் மூலம் செல்போன் வாங்கி நூதன மோசடி: மேலாளர் மீது பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சத்யா (27) என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நான் கடந்த 23.5.13ல் தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினேன். அதற்காக ஆதார், பேன் கார்டுகள் மற்றும் இதர ஆவணங்களை கொடுத்தேன். இந்நிலையில் எனது வங்கி கணக்கில் இருந்து ₹6,808 பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் வங்கியில் கொடுத்த ஆவணங்களை சரிபார்க்க மேலாளரிடம் கூறினேன். அதன்படி, அவர் ஆவணங்களை சரிபார்த்த போது, என்னுடைய ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டுகளை போலியாக தயார் செய்து லோன் பெற்றுள்ளதாக, பேன் கார்டு மற்றும் ஆதார் கார்டை காட்டினார். எனவே, வங்கியில் கொடுத்த ஆவணங்களை போலியாக தயாரித்து செல்போன் வாங்கி மோசடி செய்த வங்கி மேலாளர் மற்றும் விற்பனை பிரதிநிதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: