மாநகர பேருந்து மோதி மளிகை கடைக்காரர் பலி குடும்பத்திற்கு 15.5 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 2011ம் ஆண்டு அரசு பேருந்து மோதியதில் நடைபாதையில் நின்றிருந்த குமரேசன் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த குமரேசனின் மனைவி, தாய், தந்தை ஆகியோர் ₹1 கோடி இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், உயிரிழந்தவரின் வருமானம் மற்றும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ₹12 லட்சத்து 47 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.   இந்த உத்தரவை எதிர்த்து, மாநகர போக்குவரத்து கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயிரிழந்த குமரேசனின் மனைவிக்கு ₹9 லட்சத்து 56 ஆயிரத்து 600ம், அவரின் பெற்றோருக்கு தலா 3 லட்சம் ரூபாய் என ₹15 லட்சத்து 53 ஆயிரத்து 600ஐ வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் 8 வார காலத்தில் மாநகர போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: