சமையலுக்கான செலவை பிரிப்பதில் தகராறு முகம் சிதைத்து தொழிலாளி கொலை: வடமாநில வாலிபர் கைது

ஆவடி: கம்பெனி குடோனில் ஒன்றாக தங்கியபோது, சமையல் செலவுக்கான தொகையை பிரித்து கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், சக  தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆவடி அடுத்த வீராபுரம் பகுதி சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு முகம் சிதைந்த நிலையில் ஆண்  சடலம் கிடப்பதாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில்  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ் பீகாரி ரஸ்தே (42) என்பதும், வீராபுரம் பகுதியில் உள்ள ஜல்லி, மணல், செங்கல்,  சிமென்ட் விற்பனை செய்யும் தனியார் ஏஜென்சியில் கடந்த ஒரு  மாதமாக தங்கி வேலை செய்து வந்ததும் தெரிந்தது. மேலும், இவருடன் பீகார் மாநிலம், சட்டீஸ்கர் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (28) என்பவர் கடந்த ஒரு வாரமாக வேலை செய்து வந்ததும், இவர்கள்  இருவரும் குடோனில் உள்ள அறையில் ஒன்றாக தங்கியதும் தெரியவந்தது. அவரை போலீசார் தேடியபோது, தலைமறைவானது தெரிந்தது. அவரது செல்போன் எண்ணை வைத்து தேடியபோது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பது தெரிந்தது. ரயில்வே போலீசார் உதவியுடன், விரைந்து  சென்று அவரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது, அவர் ராஜ் பீகாரி ரஸ்தேவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: நானும், ராஜ் பீகாரி ரஸ்தேவும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். அப்போது, நாங்களே சமைத்து சாப்பிட்டோம். சமையலுக்கு தேவையான பொருட்கள்  வாங்குவதற்கு ஆகும் செலவை இருவரும் பகிர்ந்து ெகாடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், ராஜ் பீகாரி ரஸ்தே தனது பங்கை சரிவர தரவில்லை.  இதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு நாங்கள் இருவரும் வேலை முடிந்ததும், டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்து, சர்வீஸ் சாலையில் அமர்ந்து  அருந்தினோம். அப்போது, இதுதொடர்பாக எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டோம். ஆத்திரமடைந்த  நான், அங்கிருந்த கல்லை எடுத்த ராஜ் பீகாரி ரஸ்தே தலையில் போட்டேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.பின்னர், போலீசில் சிக்காமல் இருக்க சொந்த ஊர் தப்பிச் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றேன். ஆனால், அதற்குள் போலீசார் என்னை கைது  செய்துவிட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, நேற்று அம்பத்தூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: