திட்டப்பணிக்கு 99 கோடி ஒதுக்கீடு மாமல்லபுரம்-குமரி இடையே படகு போக்குவரத்து: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

தக்கலை: கன்னியாகுமரி தக்கலையில் பாஜக அரசின் நான்கரை ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

நம்முடைய திட்டங்கள் இ்ன்றைய தேவைக்கும், நாளைய தேவைக்கும் கணக்கிடக்கூடாது.  ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு எப்படி தேவையோ அந்த வகையில் திட்டமிட வேண்டும். இரட்டை ரயில் பாதை திட்டம் தேவை. அப்போது தான் கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இரட்டை ரயில் பாதை அமைக்க 50% மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முதன்முறையாக மாநில அரசின் நிதி இல்லாமல் மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கி 4 ஆயிரம் கோடி அளவில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளது. அப்போது முழுவதும் மின்சார பாதை அமையும். 4 வழிச்சாலை என்பது ஒட்டு மொத்த மக்களின் எதிர்காலம் ஆகும்.

குமரி மாவட்டத்தில் வர்த்தகத் துறைமுகம் வந்தே ஆகவேண்டும். அதற்காக தெருவில் இறங்கிப்போராடுவோம். அதற்காக யார் காலிலும் விழ தயார். விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்தார்கள். ஒரு சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக விமான நிலையம் அருகிலுள்ள மாவட்டத்தில் அமைவதற்கு 600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுலா அமைச்சர் அல்போன்ஸ் 20ம் தேதி குமரிக்கு வருகை தர உள்ளார்.  கன்னியாகுமரியில் இருந்து மாமல்லபுரம் வரை படகு போக்குவரத்து தொடங்க ரூ.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: