×

87வது பிறந்தநாள் விழா கலாம் நினைவிடத்தில் பொதுமக்கள் மரியாதை

ராமேஸ்வரம்: அப்துல் கலாமின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 87வது பிறந்தநாள், இளைஞர் எழுச்சி தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேற்று காலை கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர், பேரன்கள் ஷேக்சலீம், ஷேக்தாவூத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கலாமின் சமாதியின் முன்பு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் மலரஞ்சலி செலுத்தினர். கலாம் படித்த ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள எண்.1 பள்ளியில் அவரது உருவப்படத்திற்கு மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் கலாமின் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : birthday celebration ,shrine ,Kalam , 87th birthday party, Kalam memorial, public, respect
× RELATED கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி