×

நீர்மட்டம் 66 அடியை தாண்டியது வைகை அணை நிரம்புகிறது: முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் 66 அடியை தாண்டியதையடுத்து, கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. வெள்ளிமலை, மேகமலை, வருசநாடு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் இந்த அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், அணையில் மிக குறைந்தளவிலேயே தண்ணீர் இருந்தது. நடப்பாண்டு பருவமழை நன்றாக பெய்ததால் கடந்த ஆகஸ்ட் 17ல் வைகை அணை நிரம்பியது. இதனால் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

அணையிலிருந்து குடிநீருக்கும், பாசனத்திற்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கடந்த சில நாட்களாகவே அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் என அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,510 கனஅடியாக உள்ளது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 66.01 அடியாக உயர்ந்தது. இதையடுத்து தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், நேற்று வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaigai dam, filling, flood hazard warning
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற...