24 ஆண்டுக்கு முன் நடந்த போலி என்கவுன்டர் ராணுவ ஜெனரல் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை

கவுகாத்தி: அசாமில் போலி என்கவுன்டர் வழக்கில் ராணுவ ஜெனரல் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1994ம் ஆண்டு அசாமின் தின்சுகியா மாவட்டத்தில், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 9 இளைஞர்களை ராணுவத்தினர் பிடித்து சென்றனர். அதன்பின் அவர்களில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 பேரும் உல்பா தீவிரவாதிகள் எனவும் ராணுவம் தெரிவித்தது. பின்னர் 4 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர்.  இந்நிலையில்  அசாம் முன்னாள் அமைச்சரும் பாஜ தலைவருமான ஜகதீஷ் புயான் ஆகியோர், அதே ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி 9 இளைஞர்களையும் ஆஜர்படுத்தக்கோரி, கவுகாத்தி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராணுவம் பிடித்து சென்ற 9 பேரையும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் ராணுவம் சார்பில் தோல்லா காவல்நிலையத்தில் 5 இளைஞர்களின் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது.  இதனையடுத்து போலி என்கவுன்டர் நடத்தி 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

24 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த சனிக்கிழமை ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேஜர் ஜெனரல் லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ மற்றும் ஆர்எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங் மற்றும் ஜெகதியோ சிங், நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும் ஷிவேந்தர் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை முன்னாள் அமைச்சர் புயான் வரவேற்றுள்ளார். “நமது நாட்டின் நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: