இந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை

லண்டன்: ‘‘இந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால், பதிலுக்கு நாங்கள் 10 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்’’ என  பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறலைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்  தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்  நடத்தி அழித்தது. இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை பாகிஸ்தான் மறுத்தது. இதற்கிடையே, மீண்டும் தற்போது எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு முறை  சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல் ஆசிப் காபூர், லண்டனில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:பாகிஸ்தான் எல்லைக்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும் தைரியம் இந்தியாவுக்கு இருக்குமேயானால், பதிலுக்கு 10 சர்ஜிக்கல் ஸ்டிரைக்  தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகைய தாக்குதல்களை எங்களுக்கு எதிராக நிகழ்த்த விரும்புபவர்கள், பாகிஸ்தானின் பதிலடி  திறமைகளை மறந்துவிட வேண்டாம். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எந்த உதவியையும் பாகிஸ்தான் செய்யவில்லை. இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற போராடும் ஆக்ரமிப்பு  காஷ்மீர் மக்களுக்கு அரசியல் மற்றும் தார்மீக ரீதியாக மட்டுமே பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான காஷ்மீர் மக்களின்  போராட்டம் தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: