சமுதாயத்தை இழிவுபடுத்தும் பாடப்பிரிவு சிபிஎஸ்இ-க்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பாடப்பிரிவை இன்னும் நீக்காத செயலுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் (சிபிஎஸ்இ) 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடநூலின் 8வது பாடமாக ‘ஆடைகள், ஒரு சமூக வரலாறு’ இடம் பெற்றுள்ளது. இதில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளது. இப் பாடத்தை நீக்க வேண்டும் என பாமக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கும்படி ஆணையிட்டது.

ஆனால், அந்தப் பாடமோ அல்லது அந்தப் பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதிகளோ நீக்கப்படவில்லை. அப்பிரிவு தொடருவதுடன் ஒரு சில மாற்றங்களுடன் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அம்சங்கள் அப்படியே நீடிக்கின்றன. ஏற்கனவே உறுதியளித்தவாறு நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற பிரிவு முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: