தென்னாபிரிக்காவில் குறைந்து வரும் பெங்குவின்களின் எண்ணிக்கை

ஜோகன்னஸ்பர்க்: உலகில் வெப்பமண்டல பெங்குவின்கள் ஆப்பிரிக்கா போன்ற சில இடங்களில் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு 20 ஆயிரமாக இருந்த பெங்குவின்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 16 ஆயிரமாக குறைந்தது. புவிவெப்பமடைதலின் விளைவாக, அதிகரித்து வரும் கடல்நீர் மட்டம் காரணமாக இந்த பெங்குவின்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன என்று கூறப்படுகிறது. மேலும் போதிய மீன்கள் கிடைக்காததால் பெங்குவின்கள் அழிவை நோக்கிச் செல்வது ஆய்வின் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிட்ட எல்லை வரை சென்று மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பெங்குவின்கள் எண்ணிக்கை தற்போது பெருகி வருவது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆப்பிரிக்க பெங்குயின்களை காண ஆர்வத்துடன் வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: