மோடி ஆட்சியில் பல கோடி பேர் வேலையிழப்பு : திரிபுரா முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

திருப்பூர்: தன்னாட்சி பெற்ற நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளின் அதிகாரத்தை முடக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்சர்க்கார் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லையில் கட்டப்படும் சுஜித் பவன் கட்டிட நிதிக்கு மாணிக்சர்க்காரிடம் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது. நிதி பெற்று கொண்ட பிறகு பேசிய அவர் ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று சொன்ன மோடி ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் வேலையை இழந்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் அமெரிக்காவில் ஒரு டாலர் என்பது ரூ.1-க்கு சமம். ஆனால் அந்த ஒரு டாலருக்கு இந்தியாவில் ரூ.72 கொடுக்க வேண்டும். நாட்டின் விலைவாசி மிகவும் அதிகரித்து விட்டது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் ஏற்றம் பெற்றுள்ளது என சாடினார். நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை அகற்ற இடதுசாரி கட்சியினருக்கு, முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு முன்னதாக செம்படை பேரணி திருப்பூரில் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் வரை நடத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: