கார்ப்பரேட் லேப்களுக்கு சாதகமாக செயல்படுவதா?: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்த அரசாணை எண் 206ல் நகர்ப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்கள் 700 முதல் 1,500 சதுர அடி பரப்பளவிலும்,  கிராமப்புறங்களில் 500 சதுர அடி பரப்பளவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை நிலையங்கள் மூடப்படக்கூடிய நிலை ஏற்படும். அது கார்ப்பரேட் லேப்களுக்கு சாதகமாக அமைந்து ஏழை, எளிய மக்கள்  பாதிக்கப்படுவர். எனவே இந்த அரசாணையில் திருத்தம் செய்து நகர்புற, கிராமப்புற ரத்தப் பரிசோதனை நிலையங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: