துருக்கியில் லாரி கவிழ்ந்து 19 அகதிகள் பரிதாப பலி

இஸ்தான்புல்: துருக்கியில் கால்வாயில் லாரி கவிழ்ந்த விபத்தில் 19 அகதிகள் பலியாயினர். மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா, ஆப்ரிக்காவில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்கள் துருக்கியிலிருந்து கடல் வழியாக கிரீஸ் நாட்டுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதுபோல, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய சட்டவிரோதமாக சிலர் துருக்கியின் இஸ்மிர் விமான நிலையம் அருகே நேற்று லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

இஸ்மிர் கடல் பகுதியிலிருந்து கிரீசுக்கு படகில் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் தடுப்பு கம்பிகளை உடைத்து கால்வாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 19 அகதிகள் பரிதாபமாக இறந்தனர். இந்த ஆண்டில் மட்டும் கடல் வழியாக கிரீசுக்கு 24,500 அகதிகள் வந்துள்ளனர். இந்த முயற்சியில் 118 பேர் பலியாகி இருப்பதாக ஐநா புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: