×

டியான்ஜின் ஓபன் கார்சியா அசத்தல்

பெய்ஜிங்: டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா கோப்பையை கைப்பற்றி அசத்தினார். பரபரப்பான பைனலில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் நேற்று மோதிய கார்சியா, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7-6 (9-7) என வென்று முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் 2வது செட்டில் அதிரடியாக விளையாடி பிளிஸ்கோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 7-6 (9-7), 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் கார்சியா வென்ற முதல் டபுள்யு.டி.ஏ பட்டம் இது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diane , Tianjin Open, Garcia
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஆண்ட்ரீவா