இந்தியர்களை போல தகுதியானவர்களே அமெரிக்காவுக்கு வர வேண்டும்: அதிபர் டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: ‘‘இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைப் போன்ற தகுதியானவர்களே அமெரிக்காவுக்கு வருவதை விரும்புகிறோம்’’ என அதிபர் டெனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்க அதிபர் டிரம்ப் பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு டிரம்ப் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

எல்லை விஷயத்தில் நான் மிக கடுமையாக இருக்கிறேன். சட்டத்திற்கு உட்பட்டே எங்கள் நாட்டிற்கு எவரும் வர வேண்டும். சட்ட விரோதமாக அல்ல. அதோடு தகுதியானவர்களே இங்கு வர வேண்டுமென விரும்புகிறேன். இங்கு வருபவர்கள் அமெரிக்க மக்களின் நலனுக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைப் போன்ற தகுதியானவர்களே அமெரிக்காவுக்கு வரவேண்டும் என்பதை இங்குள்ள மக்களும் விரும்புகிறார்கள்.

சங்கிலி தொடர் குடியேற்றக் கொள்கையை நான் எதிர்க்கிறேன். இதற்கு பெரும்பாலான மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. கிரிமினல்கள், சட்டவிரோத செயல் புரிபவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை இங்குள்ள மக்களே விரும்பவில்லை. எனவே, குடியேற்றத்தில் கடுமையான கொள்கையை நாம் கொண்டுள்ளோம். நான் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. பொருளாதார ரீதியாகவும் உலகிலேயே முதன்மை நாடாக அமெரிக்கா உள்ளது. சீனா உள்ளிட்ட எந்த நாட்டுடன் எங்களை ஒப்பிட்டு பார்த்தாலும் நாங்கள்தான் வலுவான நிலையில் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: