×

ஜோகர் கோப்பை ஹாக்கி: வெற்றியை தவறவிட்ட இந்தியா

ஜோகர் பக்ரு: மலேசியாவில் நடந்த ஜூனியர் ஹாக்கி போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. சுல்தான் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இரு அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.  இந்நிலையில், இந்திய அணி வீரர் குர்சாஹிப்ஜித் சிங் 4வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். முதல் கோலை இந்திய அணி அடித்த நிலையில், இங்கிலாந்து வீரர் டேனியல் வெய்ட் 7வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஓட்ஸ் 39வது நிமிடத்தில் கோல் அடித்தார். 42வது நிமிடத்திலும் இங்கிலாந்து அணி கோல் அடித்து 1-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இந்திய வீரர் அபிஷேக் 55வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதன்மூலம்  பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Johor Cup ,India , Johor Cup Hockey, India
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...