×

உறுதி செய்தது பேஸ்புக் நிறுவனம் 3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு

வாஷிங்டன் : உலகெங்கிலும் பல கோடி பயனாளிகளை கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். இதில் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், 3 கோடி பயனாளிகளின் தகவல்கள்  திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் மேலாண்மை துணை தலைவர் கெய் ரோசன் கூறியதாவது:கடந்த ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில், 3 கோடி பயனாளிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.


ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு, அதாவது ஒரு பயனாளியிடம் இருந்து  அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று 4 லட்சம் மக்களின் கணக்குகளை திருடியுள்ளனர்.இவ்வாறு 3 கோடி பேரின் தகவல்களை திருடியுள்ளனர். பயனாளர்களின் விவரங்கள் ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்பு பாதுகாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் கணக்கை லாக் அவுட் செய்யவோ அல்லது தங்கள்  பாஸ்வேர்ட்டை மாற்றவோ தேவையில்லை. மேலும், இந்த சைபர் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்களுக்கு பயனாளிகளின் கிரெடிட் கார்டு தகவல்கள் கிடைக்காத வண்ணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள்  குறித்து எப்பிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : company , Confirmed,Facebook company, 3 crore, beneficiaries
× RELATED அறந்தாங்கி அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து