×

டியான்ஜின் ஓபன் டென்னிஸ் பைனலில் பிளிஸ்கோவா

பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார்.அரை இறுதியில் சுவிஸ் வீராங்கனை டிமியா பாஸ்கின்ஸியுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி  நேரத்திலேயே முடிவுக்கு வந்தது.மற்றொரு அரை இறுதியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-3, 6-4 என்ற நேர் செட்களை சூ வெய் சையை (தைபே) வீழ்த்தினார். இன்று நடைபெறும் பைனலில் பிளிஸ்கோவா - கார்சியா மோதுகின்றனர். ஜோகோவிச் அபாரம்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (ஜெர்மனி) நேற்று மோதிய நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6 -1 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். 3

முகுருசா அதிர்ச்சி: ஹாங்காங் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் சீன நட்சத்திரம் கியாங் வாங்குடன் மோதிய ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா 7-6 (7-5), 4-6, 5-7 என்ற செட் கணக்கில் 2 மணி, 40 நிமிடம்  போராடி தோற்றார். மற்றொரு அரை இறுதியில் சீனாவின் ஷுவாய் ஸாங் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் 104வது ரேங்க் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவிடம் (உக்ரைன்) தோற்று வெளியேறினார். இறுதிப் போட்டியில்  கியாங் வாங் - டயானா மோதுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tianjin Open Tennis Final , Blisskova, Tianjin, Tennis Final
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...