×

பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதால், தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்: நிர்மலா சீதாராமன் தாக்கு

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள் சுற்று பயணமாக சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அலோசனை நடத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து பாரீசில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவின் பொறுமையை சோதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதாகவும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பாகிஸ்தான் - ஆப்கனிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இந்திய எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் தங்களது பொறுமையை பாகிஸ்தான் சோதிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவும், பிரான்ஸும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி மற்றும் ஆயுதங்களை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் தீவிரவாத அச்சுறுத்தலை பிரான்ஸ் அரசு மிகச் சிறப்பாக கையாண்டு வருவதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,terrorists ,Nirmala Sitaraaman , Pakistan, extremists, freedom, Nirmala Sitaraaman
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்