கங்கையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி 114 நாள் உண்ணாவிரதம் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் உயிர்நீத்தார்

டெல்லி: கங்கை நதியின் குறுக்கே உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 114 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த முன்னாள் ஐஐடி பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுவாமி ஞானஸ்வரூப் சனந்த் இன்று உயிரிழந்தார். ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான சுவாமி ஞானஸ்வரூப் சனந்த் கங்கை நதியை தூய்மைபடுத்த வேண்டும், நதியின் பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மைத்ரி சதான் ஆசிரமத்தில் கடந்த 114 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருந்தார்.

நேற்று அவர் வலுக்கட்டாயமாக ஆசிரமத்தில் இருந்து தூக்கிவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று பிற்பகலில் ஞானஸ்வரூப் சனந்த் உயிரிழந்தார். கங்கை நதியின் குறுக்கே அமைக்கப்படும் மின் திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்த சனந்த், கங்கை பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கங்கை நதி வாரிய உறுப்பினராக இருந்த ஞானஸ்வரூப் சனந்த், 2010-ம் ஆண்டில் பகிராதி நதியின் குறுக்கே அமைக்க திட்டமிடப்பட்ட மின் திட்டத்தை எதித்து 38 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டத்தை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 2011-ம் ஆண்டில் கங்கை நதியின் குறுகே உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், சுவாமி நிகமானந்த் என்பவர் 2 மாதமாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சட்டப்படி நடவடிக்கைஅரசு இனியாவது...