தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சிறப்பு பேருந்து குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது என்றும் சிறப்பு பேருந்துகளில் செல்ல நவம்பர் 5-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம், சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 80 மின்சார பேருந்துகள் சென்னையிலும், 20 மின்சார பேருந்துகள் கோவையிலும் இயக்கபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மாணவர்களுக்கு 24.20 லட்சம் இலவச பேருந்து...