கால் இறுதியில் பிளிஸ்கோவா

பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் ஸ்லோவகியாவின் போலோனா ஹெர்காகுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 50 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-1, 6-3 என்ற நேர் செட்களில் போலந்தின் மாக்தா லினெட்டை வீழ்த்தினார். சீன தைபே வீராங்கனை சூ வெய் சை, குரோஷியாவின் பெத்ரா மார்டிச் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபாதை அமைக்க அனுமதி