ரெனோ கிவிட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

ரெனோ  கிவிட் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் காரின்  கான்செப்ட் மாடல் பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. ரெனோ  கிவிட் காரின் அடிப்படையிலான இந்த எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடல்  ரெனோ K-ZE என்ற பெயரில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.இந்த காரின்  ஒட்டுமொத்த வடிவமைப்பு, ரெனோ கிவிட் காரை ஒத்திருக்கிறது. அதேநேரத்தில்,  டிசைனில் சிறிய மாற்றங்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.

மெல்லிய  ஹெட்லைட் வடிவம், புதிய கிரில் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்புடன் ரெனோ  கிவிட் காரிலிருந்து வேறுபடுகிறது. இந்த காரில், அளவில் பெரிய சக்கரங்கள்  பொருத்தப்பட்டு இருப்பதால், முழுமையான எஸ்யூவி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி  வெகிக்கிள்) போல் தோற்றமளிக்கிறது. கான்செப்ட் மாடலில் ஆகாய நீல வண்ண  ஸ்டிக்கர் அலங்காரமும் அசத்துகிறது. ரெனோ K-ZE கான்செப்ட் மாடலின்  தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த கான்செப்ட்  அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார் 250 கி.மீ தூரம் வரை  பயணிக்கும் திறன்வாய்ந்ததாக உள்ளது.

வீடு மற்றும் அலுவலகங்களில்  எளிதாக சார்ஜ் செய்யும் விதத்தில், டூயல் போர்ட் சார்ஜருடன் இந்த கார்  வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தோற்றத்தில் எஸ்யூவி போல் இருந்தாலும்  ஹேட்ச்பேக் ரகத்தில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலாக இதனை  நிலைநிறுத்த ரெனோ திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு சீனாவில் இந்த காரை  முதலில் களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிக  எண்ணிக்கையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு, வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு தக்கவாறு இந்த காரின் விலையை நிர்ணயிக்க  ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனா மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட  வளரும் நாடுகளிலும் இந்த மின்சார கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட  இருக்கிறது. இந்தியாவில், அடுத்த சில ஆண்டுகளில், மின்சார கார்களுக்கான  கட்டமைப்பு வசதி ஓரளவு வந்தவுடன், இந்த மின்சார கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளன என ரெனோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: