பேசாத குழந்தையை பேச வைப்பதாக நாடகம் - பரிகார பூஜை செய்து 20 சவரன் சுருட்டிய பூசாரி கைது

வேளச்சேரி: பள்ளிக்கரணையில் பேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக நாடகமாடி, 20 சவரன் நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் லதா ரமேஷ் (45). இவருக்கு மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மேடவாக்கம், புதுநகர், ஜெயப்பிரகாஷ் தெருவிலுள்ள வீரகாளியம்மன் கோயிலுக்கு லதா ரமேஷ் சாமி கும்பிடுவதற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கோயில் நிர்வாகியும், பூசாரியுமான தினேஷ் (26) என்பவர், ‘‘உங்களது பெண் குழந்தை மற்றவர்களைபோல் பேசவும், எழுந்து நடக்கவும், சிறப்பு பூஜை செய்கிறேன்’’ என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய லதா ரமேஷ், ‘‘பூஜைக்கு என்ன தேவை?’’ என தினேஷிடம் கேட்டார். அதற்கு ‘‘உங்கள் வீட்டிலுள்ள அனைத்து நகைகளையும் கொண்டு வந்து, என்னிடம் கொடுங்கள். நான் அதை கோயிலில் வைத்து பூஜை செய்து அப்பொருட்களை ஒரு செம்பு பாத்திரத்தில் போட்டு கொடுப்பேன். அதை வீட்டுக்கு எடுத்து சென்று, திறந்து பார்க்காமல் வீட்டு பூஜையறையில் 90 நாட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்பூஜை, முடிவதற்குள் உங்களது குழந்தை பூரண குணமாகும்’’ என்று தினேஷ் கூறியுள்ளார்.இதையடுத்து லதா தனது வீட்டில் இருந்து 15 சவரன் நகையை எடுத்து வந்து பூசாரி தினேஷிடம் கொடுத்துள்ளார். அந்த நகைகளை பூஜை செய்து, லதாவிடம் ஒரு செம்பு பாத்திரத்தில் மீண்டும் தினேஷ் கொடுத்துள்ளார். அவர் பயபக்தியுடன் அந்த செம்பு பாத்திரத்தை வைத்து, 90 நாட்கள் பூஜை செய்தும் பெண் குழந்தை குணமடையவில்லை.

இதனால் சந்தேகமடைந்த லதா செம்பு பாத்திரத்ைத திறந்து பார்த்தபோது, தங்க நகைகளுக்கு பதிலாக கருங்கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது நகையை திருப்பி தரும்படி லதா பலமுறை வலியுறுத்தியும், தினேஷ் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசில் நேற்று முன்தினம் லதா புகார் அளித்தார். புகாரின்பேரில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்குராஜ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், எஸ்ஐ இளங்கனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பூசாரி தினேஷை பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.விசாரணையில் லதாவிடம் பரிகார பூஜை செய்வதாக நாடகமாடி 15 சவரன் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கோயில் பூசாரி தினேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 8 சவரன் பறிமுதல் செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: