ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் ; தாய், மகன் உட்பட 3 பேர் கைது

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ₹10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தாய், மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த  எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அருகே நேற்று அதிகாலை ஆரம்பாக்கம் எஸ்ஐ ஜெயபிரகாஷ் தலைமையில்  போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது,  நெல்லூரில் இருந்து சென்னை வந்த  அரசு பேருந்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில், பயணித்த 2 பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் மீது  சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் அமர்ந்திருந்த சீட்டுக்கு கீழ்  பார்த்தபோது 3 பைகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 24  பொட்டலங்களில் 44 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹10 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் பிடித்து விசாரித்தபோது, தஞ்சாவூரை சேர்ந்த  சரோஜா (45), இவரது மகன் ராஜி (20), மதுரையை சேர்ந்த பாண்டியம்மாள் (38) என்பது தெரியவந்தது.பிடிபட்டவர்களை திருவள்ளூர் காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும்  போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: