100 கிலோ குட்கா பறிமுதல் : மளிகை கடைக்காரர் கைது

வேளச்சேரி: வேளச்சேரி காவல் நிலைய போலீசார் நேற்று வேளச்சேரி நேருநகரில் இருக்கும் மளிகைக் கடையை சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. எனவே கடை உரிமையாளர் முருகன் (42) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் குடோன் வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தி, 100 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 மாங்காடு போலீசார் நேற்று முன்தினம் இரவு மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் குட்கா போதைப் பொருள் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள மளிகை கடை ஒன்றில் அதிக அளவில் குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கடைக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட முகமது முஸ்தபா (23) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் அந்த கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ₹80 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: