ஆலந்தூர் 12-வது மண்டலத்தில் குப்பை கொட்டினால் அபராதம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள காலி மனைகளை பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஆலந்தூர் மண்டல 12வது சுகாதாரத்துறை அதிகாரிகள், மேற்கண்ட மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் காலி மனைகளில் தேங்கியுள்ள குப்பை அகற்றப்பட்டு, அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வருகிறது. அதில், குப்பையை ஆங்காங்கே உள்ள குப்பை தொட்டியில் தான் கொட்ட வேண்டும். இனிமேல், பொது இடத்திலோ அல்லது தனியார் இடத்திலோ குப்பைகளை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்படும், என மாநகராட்சி எச்சரித்து உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: