3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி தம்பதியை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை,: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவர்களை காப்பாற்றிய முதல்நிலை பெண் காவலரை சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (39). இவரின் மகன் 12ம் வகுப்பு முடித்துள்ளார். கடந்த 23ம் தேதி யுவராஜின் மகன் குடிபோதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதேபகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் தகறாறு செய்து தாக்கியுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக யுவராஜின் மகன் மற்றும் அவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த யுவராஜ் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.  அப்போது, கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தன் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் பணியில் இருந்த முதல்நிலை பெண் காவலர் கோமதி விரைந்து சென்று அவர்களை தடுத்து காப்பாற்றினார். மேலும், அருகில் இருந்த போலீசார் யுவராஜ் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட முதல்நிலை பெண் காவலர் கோமதியை நேற்று சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: