உபரிநீரை கணக்கு காட்டிய கர்நாடகா இம்மாதம் மட்டும் 5 டிஎம்சி பாக்கி

சென்னை: உபரி நீர் திறந்து கணக்கு காட்டிய கர்நாடகா இம்மாதம் மட்டும், 5 டிஎம்சி வரை பாக்கி வைத்துள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தவணைகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தவணை காலத்தில் 192 டிஎம்சி நீர் ஒப்பந்தப்படி வழங்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு உச்ச நீதிமன்றம் 177 டிஎம்சியாக குறைத்தது. இதை தொடர்ந்து காவிரி ஆணையம் சார்பில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி கடந்த ஜூனில் 9.19, ஜூலையில் 31.24, ஆகஸ்டில் 45, செப்டம்பர் 19ம் தேதி வரை 23.28 என தர வேண்டும். ஆனால், பருவழை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பெய்தததால், அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், ஒப்பந்தப்படி தரப்பட்டதை விட கூடுதல் தண்ணீர் பெறப்பட்டது. அதன்படி, ஜூன் 13.29, ஜூலையில் 124.69, ஆகஸ்ட்டில் 176.51 டிஎம்சி தரப்பட்டது. ஆனால், தற்போது மழை இல்லாததாலும், அணையில் நீர் மட்டம் குறைந்ததாலும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால், இம்மாதத்தில் செப்டம்பர் 19ம் தேதி வரை 23.28 டிஎம்சிக்கு 17.51 டிஎம்சி திறந்து விட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 5 டிஎம்சி வரை பாக்கி வைத்துள்ளது. இதை வைத்துபார்க்கும் போது வரும் மாதங்களில் ஒப்பந்தப்படி டிஎம்சி நீர் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: