சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் செல்போன் திருடிய 7 வாலிபர்கள் கைது

சென்னை: சென்னை புளியந்தோப்பு எம்.எஸ் முத்து நகரை சேர்ந்தவர் சூர்யா (20). ஆட்டுத்தொட்டி ஊழியர். நேற்று முன்தினம் காலை வேலை முடிந்து, வி.ஓ.சி நகர் சந்திப்பில் நடந்து வந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர் சூர்யாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன் மற்றும் ₹2500 பணத்தை பறித்த கன்னிகாபுரம் நியூ காலனியை சேர்ந்த ரீகன் என்ற சந்தோஷ் குமார் (19) மற்றும் புளியந்தோப்பு கார்ப்பரேஷன் லேன் 4வது தெருவை சேர்ந்த கணேசன் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி முக்கிய குற்றவாளிகளான சபீர் கான் (21) மற்றும் அப்பு என்ற பிரதீப் (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும்,  இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என்று 20க்கும் மேற்பட்ட வழக்குகள்  நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.இவர்களிடம் இருந்து, 20 விலை உயர்ந்த செல்போன்கள், கத்தி மற்றும் 4 சவரன் செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஈசான மூர்த்தி கோயில் தெரு வழியாக செல்போனில் பேசியபடி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது வயற்றில் கத்தியால் குத்திவிட்டு, செல்போனை பறித்த மணலியை சேர்ந்த அஜித் (19), திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரத்குமார் (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 வேப்பேரியைச் சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி (47) என்பவரிடம் செல்போனை பறித்த புரசைவாக்கம் சோலையம்மன் கோவில் தெருைவச் ேசர்ந்த அஜித்குமார் (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

  கொருக்குப்பேட்டையில், லாரி டிரைவரிடம் மாமூல் கேட்டு  மிரட்டியவர்களை தட்டிக்கேட்ட சூபர்வைசரிடம் ₹1000 பணம் பறித்த அதே பகுதி மணிமாறன்  (35), ஏழுமலை (32), மோகன் (39) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  மாங்காடு சீனிவாசநகரை சேர்ந்தவர் முரளி (25). இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். வண்டி குன்றத்தூர் - குமணன்சாவடி செல்லும் சாலையில் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென முரளி பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

  காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், காந்தி சாலையை சேர்ந்தவர் வனிதா (22). இவரது கணவன் பாலாஜி (38). சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி சிறையில் இருந்துள்ளான். அப்போது வனிதாக்கும், அதேபகுதியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரான கணபதி (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து வனிதா தலைமறைவானார். சிறையில் இருந்து வெளியே வந்த பாலாஜிக்கு, இருவரின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து வனிதாயின் தம்பி அஜீத் (19) மற்றும் பாலாஜி ஆகிய இருவரும், வனிதா இருக்கும் இடம் அறிந்து அங்கு அவரையும், அவரது கள்ளக்காதலன் கணபதியையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். புகாரின்பேரில், தலைமறைவாக இருந்த அஜீத்தை போலீசார் கைது செய்தனர்.

  வில்லிவாக்கம் சிட்கோ நகர் 18வது தெருவை சேர்ந்தவர் பத்ரி நாராயணன் (34). இந்து அமைப்பு நிர்வாகி. இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை உடைத்த வில்லிவாக்கம் சிட்கோ நகர் 56வது தெருவை சேர்ந்த காவலர் கிங்ஸ்லி ஜெயராஜ் (33), அயனாவரம் சோமசுந்தரம் 4வது தெருவை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் அகஸ்டின் (24), கீழ்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (22), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  பள்ளிக்கரணை, நூக்கம்பாளையம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செல்லையா. இவரது மனைவி லட்சுமி (56). கூலி தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு இருவருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த லட்சுமி நள்ளிரவு மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.60 லட்சம் சொத்தை விற்க முயன்ற இருவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கபாடியை சேர்ந்த ராமஜெயராமன் என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ராமஜெயராமனுக்கு அம்பத்தூர் அடுத்த வட பெரும்பாக்கம் தணிகாசலம் நகரில் 2400 சதுர அடி காலி மனையை ஆள் மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயார் செய்து ₹60 லட்சம் மதிப்புள்ள அந்த சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் கொளத்தூர் செந்தில் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (49), புரசைவாக்கம் பழைய தாண்டவராயன் தெருவை சேர்ந்த திவாகரன் (39) ஆகிய 2 பேர் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: