ராணுவ உதவியுடன் பலமாக அணை கட்ட வலியுறுத்தி முக்கொம்புக்கு பேரணியாக சென்ற விவசாயிகளுடன் போலீஸ் தள்ளுமுள்ளு: திருச்சியில் பரபரப்பு

திருச்சி: முக்கொம்புக்கு பேரணியாக புறப்பட்ட விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.முக்கொம்பில் கொள்ளிடம் தடுப்பணையின் 9 மதகுகள் கடந்த மாதம் 22ம் தேதி இரவு உடைந்தது. இந்த உடைப்பை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய தடுப்பணை ₹410 கோடியில்  அமைக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், விவசாயிகள் தரப்பினர், `உடைந்த தடுப்பணையை ராணுவத்தை கொண்டு உடனே சரி செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினர். தற்போது,  ஒருமாதமாகியும் முக்கொம்பில் நீர்கசிவு ஏற்பட்டு தண்ணீர், கொள்ளிடத்தில் சென்று கொண்டிருக்கிறது.

 இதனால் டெல்டா பாசனத்திற்கு முழு தண்ணீரையும் பயன்படுத்த முடியாத நிலை  ஏற்பட்டு உள்ளது.இதனால், உடைந்த தடுப்பணையை ராணுவத்தை கொண்டு உடனே சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தி திருச்சி சத்திரம் அண்ணாசிலையில் இருந்து பேரணியாக  முக்கொம்பு வரை செல்ல முடிவு செய்தனர். அதன்படி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் 200 பேர், நேற்று காலையில் அண்ணா சிலை அருகே  குவிந்தனர்.அப்போது,போலீசார் அவர்களை தடுத்து, `உங்களுக்கு பேரணி செல்ல அனுமதி இல்லை’ என கூறி தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு, கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வேன்களில்  முக்கொம்பு சென்ற விவசாயிகள், அங்கு முக்கொம்பு நுழை வாயில் முன் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: