அமைச்சர் உதயகுமார் பேட்டி டிடிவி.தினகரன் அணியில் மர்மம் நிலவுகிறது

திருப்பரங்குன்றம்: டி.டி.வி.தினகரன் அணியில் மர்மம் நிலவுவதாக அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமாரிடம் நிருபர்கள், குற்றப்பின்னணி உள்ளவர்கள்  தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேட்டபோது, ‘‘அதிமுக தலைமை தான் இதற்குரிய கருத்துக்களை, முடிவுகளை சொல்வார்கள். தீர்ப்பை பற்றி நான்  கருத்துக் கூறக்கூடாது. எச்.ராஜா மீது புகாரின்  அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கிற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதியில் குக்கர்  சின்னம் அதிகளவில் வரையப்பட்டு வருவதாக கேட்கிறீர்கள். அமமுகவை பொறுத்தவரை குக்கர் சின்னமும், கட்சியும் உறுதியானதில்லை. உறுதியில்லாத நிலையில் எதற்கு குக்கர்  சின்னத்தை வரைகிறார்கள் என்று தெரியவில்லை. டி.டி.வி.தினகரன் அணியைப்  பொறுத்தவரை எதுவுமே தெரிந்து கொள்ள முடியாமல் மர்மமாக உள்ளது. இந்த மர்மத்தை  பத்திரிகையாளர்கள்தான் கேட்டுச் சொல்ல வேண்டும்,’’ என்றார்.

லைசென்ஸ் இல்லாமல் திருட்டு கார் ஓட்டும் கும்பல்:  விழாவில் மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறிய குட்டிக்கதை: புதிதாக கட்டப்பட்ட ஒரு உயர்மட்ட மேம்பாலம்  திறக்கப்பட்டது. அதில் நூறாவது ஆளாக ஓட்டி வரும் காருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு என அறிவித்தனர். நூறாவதாக வந்த காருக்கு பரிசுப்பணமும் தரப்பட்டது. ‘இந்த பத்தாயிரத்தை வைத்து என்ன  செய்யப் போகிறாய்’ என்று அந்த கார் டிரைவரிடம் கேட்டதற்கு, ‘இந்த பணத்தை வைத்து லைசென்ஸ் எடுக்கப் போகிறேன்’ என்றாராம். ‘லைசென்ஸ் இல்லாமலா கார் ஓட்டுகிறாய்’ என்று  கேட்டதற்கு, அவரது மனைவி, கணவர் குடித்து விட்டு உளறுவதாக சொன்னாராம். அப்போது, அங்கிருந்த டிரைவரின் அப்பா, ‘இப்படித்தாங்க என் மகன் செஞ்சிடுறான். இந்தக் காரையும்  திருடித்தான் ஓட்டி வந்திருக்கான்’ என்றாராம். இதைப்போலத்தான் அதிமுக எங்களுடையது என்று சொல்லிக்கொண்டு, டி.டி.வி.தினகரன் அணியினர் லைசென்ஸ் இல்லாமல், மது  போதையில்,  திருட்டு கார் ஓட்டும் கும்பலாக இருந்து வருகிறது,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: