அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வென்றதால் இந்தியா - மாலத்தீவு உறவு மலரும்: சீனாவின் ஆதிக்கம் குறையும்

புதுடெல்லி : மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா - மாலத்தீவு உறவில் மீண்டும்  புதிய அத்தியாயம் பிறக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.மாலத்தீவில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் இப்ராகீம் முகமது வெற்றி பெற்றார். அவர் வெற்றி அடைந்துள்ளதற்கு இந்தியா மகிழ்ச்சி  தெரிவித்துள்ளது. இலங்கை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மாலத்தீவு தேர்தல் முடிவு குறித்து இந்தியா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இந்தியா - மாலத்தீவு இடையிலான உறவு சுமூகமாக இல்லாத நிலையில், அங்கு அமையவுள்ள புதிய கூட்டணி அரசால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு  மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் சீனாவுடன் கைகோர்த்து மாலத்தீவு ஈடுபட்டது.  

இதனால், இந்தியா ஆத்திரம் அடைவதற்கான  தருணங்கள் பலமுறை ஏற்பட்டன. ஆனால், மாலத்தீவு விவகாரத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்தியா பொறுமை காத்து வந்தது. மாலத்தீவில் சீனா, சவுதி அரேபியாவுடன் இணைந்து யமீன் அரசு செயல்பட்டு வந்தது. மாலத்தீவின் 7 தீவுகளில் பல உள்கட்டமைப்புகள், ரிசார்ட்டுகளை சீனா உருவாக்கியுள்ளது. இதையடுத்து, இந்தியா உடனான நட்பை மாலத்தீவு அரசு விலக்கி வைத்தது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவிற்கு சொந்தமான சில தீவுகளை சீனா வசப்படுத்தி, அங்கு தனது கடற்படை  நீர்மூழ்கி கப்பல்களை நிலை நிறுத்தியது.இதனிடையே, மாலத்தீவில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள இப்ராகீம் முகமது தலைமையிலான அரசு, இந்தியா  உடனான உறவை மீண்டும் புதுப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: