எம்எல்ஏ கொலையால் 4 மாநில எல்லைகளில் கண்காணிப்பு வெடிகுண்டுகளுடன் 7 மாவோயிஸ்ட்டுகள் கைது: மக்கள் பிரதிநிதிகளை கொல்ல திட்டமிட்டது அம்பலம்

திருமலை: சட்டீஸ்கர் மாநிலத்தில் பதுங்கியிருந்த 7 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.  ஆந்திராவில் அரக்கு தொகுதி தெலுங்கு தேசம் எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோர் விவிடிபுட் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு  திரும்பியபோது மாவோயிஸ்ட்டுகளால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி அமெரிக்க பயணத்தில் இருந்த ஆந்திர  டிஜிபி ஆர்.பி.தாகூருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

இதனால் டிஜிபி அமெரிக்காவில்  இருந்து ஐதராபாத் வழியாக நேற்று மாலை விசாகப்பட்டினத்திற்கு வந்தார்.இந்நிலையில் கூடுதல் டிஜிபி ஹரிஷ்குமார் குப்தா, டிஐஜி ராம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒடிசா டிஜிபி ராஜேந்திரபிரசாத் தலைமையிலான போலீசார், ஆந்திரா- ஒடிசா   எல்லையில் டிரோன்  கேமரா மூலம் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆந்திர போலீசாரும் பாடேரூ,  பார்வதிபுரம், அரக்கு  உள்ளிட்ட  பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, சட்டீஸ்கர் மாநிலத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் 7 பேரை போலீசார் நேற்று முன்தினம்  அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த  வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். பைப் வெடிகுண்டுகள்  மூலம் மக்கள் பிரதிநிதிகளை கொல்ல இவர்கள்  சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: