சிறை சீர்த்திருத்தம் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

புதுடெல்லி: நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட  குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 1,382 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், மனித நேயமற்ற சூழ்நிலைகள் நிலவுவதாகவும், ெபண் கைதிகள்  எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறியது. அதில், “சிறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி  அமித்தவா ராய் தலைமையிலான 3 பேர் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழு நாடு முழுவதும் உள்ள சிறைகளை சீரமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும். மேலும்,  சிறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: