திருவள்ளூரில் பரவும் டெங்கு காய்ச்சல் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி பெண் கலெக்டர் ஆய்வு: சுத்தமாக பராமரிக்காவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை

சென்னை: மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி பெண் கலெக்டர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவள்ளூர் அடுத்த பேரத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ராஜசேகர் (12), மணவாளநகர் பகுதியை சேர்ந்த சிறுவன் சரண் (6), திருவள்ளூர் நகராட்சியில் வசிக்கும் சிறுமி ஷர்மிலி (11),  நல்லாட்டூர் ஏழுமலை (45), நெமிலி சேகர் மகள் பிரவீனா (11). அங்கு நடந்த ரத்த பரிசோதனையில், இவர்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. மாணவியையும் மேல் சிகிச்சைக்காக  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், சிறுமி ஷர்மிலி சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று திடீரென ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கமிஷ்னர் முருகேசன், திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், துணை  வட்டாட்சியர்  வெங்கடேசன், சுகாதாரத்துறை, நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி சாலை, பஜார் வீதி, மோதிலால் தெரு, அய்யனார் அவென்யூ, பெரியகுப்பம் என  10க்கும் மேற்பட்ட இடங்களில்  நேற்று அதிகாலையிலேயே திடீர் ஆய்வு செய்தார்.  

பெரியகுப்பத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை வழங்கும் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி மீது ஏறி,  முறையாக தொட்டி சுத்தம் செய்யப்பட்டு உள்ளதா, குளோரினேஷன் செய்யப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது முறையாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிக்கப்படாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த 3 வீடுகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார். இனி ஆய்வின்போது குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தால்,  ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எனப்படும் எனவும் எச்சரித்தார். டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 ஒன்றியங்களில் வருவாய்த்துறை, சுகாதாரம், உள்ளாட்சித்துறை அதிகாரிகளை கொண்ட 14 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு  உள்ளதாகவும், கொசு ஒழிப்பு பணியில் 1,000 ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: