11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு அக்.30க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அதனை எதிர்க்கும் விதமாக தற்போதைய துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த  மனு பரிசீலிக்கப்படவில்லை. இதனைத் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி  வழக்கு தொடர்ந்தார். வெற்றிவேல் உள்ளிட்ட தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இது தள்ளுபடி செய்யப்பட்டது. இரு மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகர் தனபால், செயலாளர் மற்றும் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் ஆகிய அனைவரும் 4 வாரத்தில்  நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி கடந்த ஜூலை 9ம் தேதி உத்தரவிட்டது.

நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன்   உத்தரவில், ‘‘இரண்டு வாரத்தில் சபாநாயகர், செயலாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அல்லாத  மற்ற 10 எம்எல்ஏக்களும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.  இதையடுத்த 2 வாரத்தில் பதில் மனு குறித்த விளக்க மனுவை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து  நேற்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: