சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு பாஜவுக்கு கூஜா தூக்கவில்லை

சேலம்: திட்டங்களையும், நிதியையும் பெறுவதற்காகவே இணக்கமாக இருக்கிறோம். மோடி அரசுக்கு நாங்கள் கூஜா தூக்கவில்லை. நான் பேடியும் இல்லை என்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலத்தில் அதிமுக சார்பில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக அரசு, தவறு செய்வது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை ெகாள்கைக்காக விசுவாசத்தோடு உழைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து தான், மந்திரிகளாகவும், எம்எல்ஏக்களாகவும் இருக்கிறோம். எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் ஒழிக்க முயன்று முடியவில்லை. தற்போது எங்களையும் அழிக்க நினைக்கின்றனர்.

எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் உழைப்பும், தைரியமும், தெம்பும் உள்ள எங்களை ஒன்றும் செய்யமுடியாது. என்னை பேடி என்கிறார்கள். நான் பேடியல்ல, மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறேன். நாங்கள் பதவி வெறி பிடித்த மனிதர்கள் அல்ல. நான் கிளைக்கழக செயலாளராக இருந்து படிப்படியாக உழைத்து முன்னேறி, இந்தநிலைக்கு வந்துள்ளேன். அந்த இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு வருவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு மட்டுமே தெரியும். தற்போது முதல்வர் என்பதும் விசுவாசமான உழைப்பிற்கு  கிடைத்த பரிசு.  அதிமுக அரசு தான், மக்களுக்கு உதவும் அரசு. எப்படி தேடினாலும் இந்த அரசு மீது ஒரு குற்றமும் கண்டு பிடிக்க முடியாது. தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு நாங்கள் கூஜா தூக்கவில்லை.

மத்தியில் பாரதிய ஜனதாவும், மாநிலத்தில் நாங்களும் ஆட்சியில் இருக்கிறோம். அவர்களோடு இணக்கமாக இருந்தால்தான், திட்டங்களையும், நிதியையும் பெற்று மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். அவர்களுடனும் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. வேறு யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. மாநில பிரச்னைகளுக்கு எதிராக, அவர்கள் வந்தால் மத்திய அரசை எதிர்த்து நிற்போம். இந்த அடிப்படையில்தான், காவிரி பிரச்னை வந்தபோது 23 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினர். மாம்பழத்தில் வண்டு நுழையும். ஆனால் எங்கள் கோட்டையை யாராலும் துளைக்க முடியாது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: