18 ஆண்டுகளாக மகள் கோமா நுகர்வோர் ஆணையத்தில் இழப்பீடு கோரி தாய் மனு

மதுரை:  குமரி மாவட்டம், பொன்மனையை சேர்ந்த வனஜா, மதுரையிலுள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:  என் மகள் ஷோபாவுக்கும், ரமேஷ்பாபு என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2000ம் ஆண்டில் என் மகளை பிரசவத்திற்காக குலசேகரம் கூட்டுறவு சங்க மருத்துவமனையில் சேர்த்தோம். கடந்த 3.3.2000ல் என் மகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது ஏற்பட்ட பாதிப்பால் என் மகள் கோமாவிற்கு சென்றார். இதனால் இழப்பீடு கோரி ரமேஷ்பாபு இந்த நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். பல ஆண்டுகளாக என் மகளுக்கு கோமாவில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரது கணவர் ரமேஷ்பாபு, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதனால் என் மகளை பராமரிக்க நான் சிரமப்படுகிறேன். எனது பேத்திக்கு 18 வயதாகிறது. தக்கலையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 18 வருடங்களாக செலவு செய்த தொகையை காப்பீடாக வழங்கவும், மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு ஆணைய நீதித்துறை உறுப்பினர் ராஜசேகரன், உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இவர்கள், மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: