மருத்துவமனை முதல் சுடுகாடு வரை அனைத்து பணிகளுக்கும் ஒப்பந்தம் : தனியார்மயமாகும் சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சி பெரும்பாலான பணிகளை  தனியாருக்கு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவிற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.    சென்னை மாநகராட்சியில் 9, 10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தம்  ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை எடுத்துள்ள ராம்கி இன்ஜினியரிங் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி டெண்டர் வெளியிட்டது. இந்த முடிவிற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன.  

 

இதுதொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 10க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அனைத்து துறைகளும் தனியாருக்கு கொடுக்கப்பட்டு விட்டன. முதலில் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும்தான் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து வந்தனர். இப்போது, அனைத்து பணிகளையும் தனியாருக்கு கொடுத்துவிட்டனர்.

முதல் முறையாக 2010ம் ஆண்டு துப்புரவு பணியானது சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளையும் தனியாருக்கு கொடுக்க தொடங்கிவிட்டனர். இயந்திர பொறியியல் துறையில் வாகனங்களை பழுது பார்க்கும் பணி, உதிரி பாகங்கஙள் பணி என்று அனைத்து பணிகளையும் அவுட் சோர்சிங் முறையில்தான் செய்கின்றனர்.

 சுடுகாடுகளை பாரமரிப்பு மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பான பணியையும் தனியாருக்கு கொடுத்துவிட்டனர். சுகாதாரத் துறையிலும் இதே நிலைமைதான். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் தனியாருக்கு கொடுத்து விடுகின்றனர். அங்கு பணிபுரியும் ஊழியருக்கு சம்பளம், அதன் பராமரிப்பு செலவு என்று அனைத்து செலவுகளையும் அந்த ஒப்பந்தம் எடுத்தவர்தான் செய்ய வேண்டும்.

இப்படி அனைத்து துறைகளையும் தனியாருக்கு கொடுத்துவிட்டனர். இப்போது மீதம் உள்ளது திடக்கழிவு மேலாண்மை துறைதான். இதையும் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்துவிட்டனர்.  முதல்கட்டமாக  4 மண்டலங்களை கொடுத்தனர். இப்போது 8 மண்டலங்களை கொடுக்க முடிவு செய்து ெடண்டர் கோரியுள்ளனர். ஏற்கனவே இந்த ஒப்பந்தத்ைத எடுத்த தனியார் நிறுவனம் பல்வேறு முைறகேடுகளில் ஈடுபட்டுவருகிறது. அதை சரி செய்யாமல் இப்போது மீதம் உள்ள மண்டலங்களையும் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து  போராட்டம் நடத்த உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

 முதல் முறையாக 2010ம் ஆண்டு துப்புரவு பணியானது சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளையும் தனியாருக்கு கொடுக்க தொடங்கி விட்டனர். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் தனியாருக்கு கொடுத்து விடுகின்றனர். அங்கு பணிபுரியும் ஊழியருக்கு சம்பளம், அதன் பராமரிப்பு செலவு என்று அனைத்து செலவுகளையும் அந்த ஒப்பந்தம் எடுத்தவர்தான் செய்ய வேண்டும்.

இன்று ஆலோசனைக் கூட்டம்

8 மண்டலங்களில் துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கான டெண்டர்  தொடர்பான ஆலோசனைக்  கூட்டம் இன்று காலை 11.30  சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறவுள்ளது. ஆணையாளர் பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ள காரணத்தால் ஆணையர் பொறுப்பை கவனித்து வரும்  துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஆர்.லலிதா தலைமையில்  இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.  

4,000 இடங்கள் காலி

சென்னை மாநகராட்சியில் 2012ம் ஆண்டு வரை புதிதாக ஆட்கள் எடுக்கப்பட்டனர். அதன்பின், தனியாரிடம் ஒப்படைப்பதற்காக மாநகராட்சியில் புதிதாக ஆட்கள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், தற்போது 4000 இடங்கள் காலியாக உள்ளன.

மண்டலங்கள்    15

வார்டுகள்    200

மொத்தப்பணியாளர்கள்     23,481

காலிப்பணியிடம்    4,000

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: