பாக்ராபேட்டை அருகே அதிரடி சோதனை : செம்மரம் கடத்திய 3 தமிழர்கள் கைது

திருமலை: பாக்ராபேட்டை அருகே வனத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது, அவர்களிடமிருந்த ₹1 கோடி மதிப்புள்ள 22 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவின் பாக்ராபேட்டை  வனச்சரகர் ரகுநாத் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, சியாமளா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கொண்டு 20க்கும் மேற்பட்டோர் வந்து ெகாண்டிருந்தனர். இதைபார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர்.

ஆனால் கடத்தல்காரர்கள் அவர்கள் கொண்டு வந்த செம்மரங்களை ஆங்காங்கே வீசிவிட்டு தப்பியோடினர். அவர்களில் 3பேரை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் தாலுகா, வெள்ளிமலை ஊராட்சியை சேர்ந்த தங்கராஜ், தொரடிப்பட்டு ராஜ், சின்னதம்பி என தெரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த ₹1 கோடி மதிப்பு 658 கிலோ எடையுள்ள 22 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்த 3 பேரையும் பீலேரு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: